" alt="" aria-hidden="true" />
சென்னையில் போக்குவரத்து வட்டார அலுவலங்களில் மார்ச் 31ம் தேதி வரை (L L R & LICENCE) வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறையில் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு மற்றும் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை குறித்து மாநகர போக்குவரத்து கழக தலைமைய கருத்தரங்கு கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல் ஆம்னி பேருந்துகள் சங்க தலைவர் அபச்ல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தினருடன் ஆலோசனை நடத்திய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அப்போது பேசுகையில், கொரோனா வைரஸ் நோயினை உலகளாவிய நோய்த் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்ள் அதிகம் பயன்படுத்துகின்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 21092 பேருந்துகளும் கடந்த 9ம் தேதி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
386 பேருந்து நிலையங்களிலும் தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து இப்பணிகள மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் உள்பட 12592 பேருந்துகளை கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்யுமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் கல்லூரி பேருந்துகள், பள்ளி வாகனங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு தகுந்தார் போல் பேருந்துகளின் எண்ணிக்கையையும் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்டிஒ அலுவலங்களில் புதிதாக பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுநர் உரிமம் கொடுப்பது வரும் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லைசென்ஸ் தேதி முடிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம். ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் எண்ணிக்கைய பொறுத்து பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.